








50+ Years Experince
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி
என் பேரன்பிற்குரிய, என் உயிரினும் மேலான சொந்தங்களே, நண்பர்களே! வணக்கம். 1971ல் தொடங்கி இன்று வரை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயம் மற்றும் சமூக மக்களின் மேம்பாட்டிற்காக இன்று வரை முழு முனைப்புடன் முழுமையாக மக்கள் பணியில் அர்ப்பணித்ததில் மிகந்த மன நிறைவு கொள்கிறேன். இன்னும் வருகிற நாட்களில் சமுதாய சமூக நீதி மற்றும் தமிழக மக்கள் நலனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்.
என் வாழ்வு முழுமையாக சமூக, சமுதாய செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற போது நான் கடந்து வந்த பாதை வேதனைகளும்,சோதனைகளும் நிறைந்த பாதையாக இருந்தது. இருந்த போதிலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று நிர்ணயித்த இலக்குகளை சமூக மற்றும் சமுதாய நலனுக்காக இன வளமைக்காக அறுதியிட்டு அறிவாயுதம் ஏந்தி அறவழியில் போராட்டம் நடத்தி அனைவரின் உரிமையை பெற்றுக் கொடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். இனி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சொந்தங்களையும் ஒருங்கிணைத்து வருங்கால அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த சாமானியானும் சாதிக்கும் வகையில் முனைப்புடன் நம் கட்சி செயல்பட்டு வருகின்றது.
தேர்தல் அறிக்கை







இந்த அறிக்கை பொது நலம் சார்ந்தது!
எங்கள் கட்சியின் இத்தனை கால சமுதாய தேர்தல் அனுபவங்களில் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நலம் பெயர்க்கும் கொள்கைகள், கோரிக்கைகள் திட்டங்களை முன்னிறுத்தியுள்ளோம். இன்றைய எங்களது அரசியல் வளர்ச்சி பின்னணியோடு இந்த 2021 மாநில தேர்தலில் ஒரு வெற்றி பெறும் கூட்டணியோடு எங்கள் கொள்கைகள் மாறாமல் பயணித்து அமையவிருக்கும் அரசாட்சியில் எங்கள் பங்களிப்பை செலுத்துவோம். தேர்தலுக்கு பின் வரும் 5 ஆண்டுகளில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.
எங்கள் அறிக்கை உள்நாடு மற்றும் உலக அமைதிக்காக தயாரிக்கப்பட்டது!
எங்கள் கட்சி உள்நாட்டு பாதுகாப்பு அமைதி சூழல் ஆகியவற்றிற்க்கு முழு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். எங்கள் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தும் உள்நாட்டு அமைதி மற்றும் சமாதானத்தை நோக்கியே அமைந்திருக்கும். எங்கள் கட்சி முன்னணி நிர்வாகிகள் அனைவரும் சமூக, மத, இன நல்லிணக்கத்தை பேணி அனைவரும் அமைதியாக வாழ உறுதி பூண்டுள்ளார்கள். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முக்கிய கோட்பாடான சமூக, மத, இன வேறுபாடு இல்லாத ஒரு முற்போக்கான சமூகத்திற்காக பாடு படுவோம் என்று உறுதியளிக்கிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகளை முன்னிறுத்துகிறது!
எங்கள் கட்சி நமது சமூகத்தில் அடிப்படை கோட்பாடான பெண்களுக்கான மரியாதையையும் பாதுகாப்பையும் முதன்மையாக மதிக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சுயமதிப்பீடு மற்றும் அவர்களுக்கான கௌரவத்தை போற்றுகின்ற வகையிலே தயாரிக்கப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கை தமிழகத்தின் பொருளாதார நலனையும்
தமிழரின் வாழ்க்கை தரத்தையும் முன்னிறுத்துகிது! தமிழகம் ஒரு மாநிலமாக, இந்த உலகமே போற்றும் அளவில் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. எங்களுடைய நோக்கம் அந்த வளர்ச்சியினை பன்மடங்காக்கி மாறும் சூழ்நிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளக் கூடிய ஒரு சமூகமாகவும், வாழ்க்கை தரம் உயர்த்த ஒரு சமூகமாக திகழவேண்டும் என்பதற்காகவும் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கை தமிழக குடும்பங்களின் பொருளாதார, சமூக அரசியல் பாதுகாப்பை உறுதி செய்கிறது!
தமிழகத்தின் சமூக பரப்பு பன்முனை கொண்டது. இந்த நாள் வரை தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது, மேம்பட்ட சமூகமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுகாறும் இருந்த ஆட்சியாளர்கள் குறுகிய கால தேவைகளை முன்னிறுத்தி வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தினர். எங்கள் கட்சி நீண்ட கால கண்ணோட்டத்தோடு பல தலைமுறைகளையும் உள்ளடக்கி வளர்ச்சிப் பணிகளை செய்ய முன்னெடுக்கிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை தாய் பூமியின் நலன் சார்ந்தது!
ஒரு அரசியல் கட்சியாக பூமி தாயின் நலம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுற்று சூழலியல் சார்ந்து பணிகளை ஆற்றி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் யாவும் சூழலியல் பாதுகாப்பை முன்னிறுத்தி அமைந்திருக்கிறது என்று உறுதியளிக்கிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார நிறுவன அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது!
இந்த நிகழ் உலகம் பாதுகாப்பற்ற, உறுதியில்லாத, குழப்பமான மற்றும் ஒற்றுமையில்லாத உலகமாக மாறிக்கொண்டிருக்கிறது... இங்கே வாழ்வும், வாழ்க்கைத்தரமும் மிக வேகமாக மாறி வந்து கொண்டே இருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கை இந்த மாறி வரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமூர்த்தியின் சமூகத்திட்டங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலன்
- கடந்த சில காலங்களில் பெண்களின் பொருளாதாரம் உயர்ந்து வந்திருக்கிறது. இருந்த பொழுதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமை சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு தேவையான அனைத்து பொருளாதார சமூக அரண்களை பலப்படுத்துவோம் என உறுதியளிக்கிறோம்.
- குழந்தை தடை தொழிலாளர்களை பயன்படுத்துவது செய்யப்பட்டிருந்தாலும் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் முறை மாறாமல் உள்ளது. எங்கள் கட்சி குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டி அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்பு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளிக்கிறது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பல்பொருள் அங்காடிகளை ஏற்படுத்துவோம்.

சுகாதாரம் மற்றும் மருத்துவம்
- நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ காப்புரிமையை இலவசமாக பெறுவதற்கும் அவற்றை நியாய விலை கடைகள் மூலமாக பெறுவதற்கும் முயற்சி செய்வோம்.
- அரசு வழங்கும் அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவமனைகளையும் ஒவ்வொரு குடிமகனும் தடையின்றி, ஊழலின்றி பெற உறுதி செய்வோம்.
- முதியோர் நலனில் மிகுந்த அக்கறை அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான உதவி செய்யும் மாணவ அமைப்புகளை உருவாக்குவோம்.
- அரசு செலவில் ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சியில் மேம்படுத்தப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனை நிலையங்களை உருவாக்குவோம்.
- அனைத்து குடிமக்களும் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு திட்டங்களை செயல்படுத்த உறுதி செய்வோம்.

இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு
- இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய சவால் நல்ல வேலைவாய்ப்புகளை பெறுவது. எங்கள் கட்சி நம் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்யும்.
- நகர வேலைவாய்ப்புகளை கிராமங்களுக்கு கொண்டு சென்று கிராமம் மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முயற்சி எடுப்போம்.
- இணையம் மூலமாக அனைத்து இளைஞர்களும் ஆங்கில பேச்சுப் புலமை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி இலவசமாக பெற உறுதியளிக்கிறோம்.
- எங்கள் கட்சி அனைத்து இளைஞர்களுக்கும் குறைந்த செலவில் உயர் படிப்பு பெற உறுதி செய்யும்.
- ஒவ்வொரு நகராட்சியிலும் இளைஞர்கள் தொழில் முனைவோர் அரசு முதலீடு கொடுக்கும் ஆர்வத்தை பன்படுத்திக் கொள்ள திட்டத்தினை அறிமுகப்படுத்துவோம்.

விவசாய வளர்ச்சி
- எங்கள் கட்சி பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினரையும், விவசாயிகளையும் கொண்ட கட்சி.
- விவசாயிகள் அனைத்துப் பணிகளையும் தொழில் நுட்ப உதவியோடு செய்து கொள்ள முயற்சி எடுப்போம்.
- வாரவிடுமுறை மற்றும் தொலைதூர விவசாய தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.
- இயற்கை விவசாயம் மூலமாக பாரம்பரிய ரகங்களை மீட்டு உருவாக்கம் செய்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம்.
- சூழலியல் மாற்றம் காரணமாக ஏற்படும் தாக்கங்களிலிருந்து விவசாயிகள் தங்களை காத்துக் கொள்ள தேவையான உதவிகளை செய்வோம்.
- கிராமங்களில் இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகளை தொழில் ரீதியாக உற்பத்தி செய்ய இளைஞர்களையும், சுய உதவி குழுக்களையும் மற்றும் சிறு, குறு முனைவோரையும் ஊக்குவிப்போம்.

தொழில் நுட்ப வளர்ச்சி
- ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு சார்ந்த இணைய வழி சேவை கிடைக்க எங்கள் கட்சி பாடுபடும்.
- குடியுரிமை சார்ந்த அனைத்து சேவைகளும் இணையம் மூலமாக குக்கிராமங்களுக்கு கூட கிடைப்பதற்கு முயற்சிகள் செய்யப்படும்.
- தனிமனித வாழ்வு சூழ்நிலையில் இணையவழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்.
- இணையவழியில் தொழில் செய்யவும் வேலைவாய்ப்புகளை பெறவும் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளவும் பாதுகாப்பு சுகாதாரம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கவும் முயற்சிகள் செய்யப்படும்.
- தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை இளைஞர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் மற்றும் கிராமங்களில் பெறுவதற்காக தனியாக தொழில் நுட்ப பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
புத்தகங்கள்




