வன்னியர்குல சத்திரியர்கள்
- வன்னியர் குல சத்திரியர்கள் என்பவர்கள் இந்த பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு இனம். பிரிட்டிஷர் 1929 𝘎𝘖 271 (13.06.1929) சென்னை மாகாண சட்டம் மூலமாக இதை அங்கீகரித்தனர்.
- வன்னியர் குல சத்திரியர் மகா சங்கம் முதல் இனச்சங்கமாக உருவெடுத்து அது கல்வி, ஒழுக்கம், ஆன்மீகம் போன்ற வாழ்வியல்களில் வழிகாட்ட தொடங்கியது. இந்த இனம் மட்டுமே வன்னியர் குல சத்திரியர் என்ற பட்டத்தை பயன்படுத்த முடியும்.
- 1931-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் (சென்னை மாகாணம், தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகள், கேரளா பகுதிகளை உள்ளடக்கியது) அதிக மக்கள் தொகை கொண்ட இனமாக அறியப்பட்டது.
- தமிழ்நட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 140 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் வன்னியர் குல சத்திரியர்கள். அவ்வாறே பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிப்பவர்களும் இவர்களே.
- தற்போதைய தமிழக மக்கள் தொகையில் தோராயமாக 6.75 கோடி வாக்காளர்களில் 2.25 கோடி வாக்காளர்கள் வன்னியர் குல சத்திரியர்களாக இருக்கிறார்கள்.
- விடுதலை போராட்டத்தில் தேச தந்தை மகாத்மா காந்தியை பின்பற்றி இந்த சமூகத்தை சார்ந்த பல தலைவர்கள் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்களில் முக்கியமானவர்கள்
- நாகப்பன் படையாச்சி (1891-1909)
- சர்தார் ஆதிகேசவலு நாயகர் (1899-1964)
- ராமசாமி படையாச்சியார் (19 முறை 𝘔𝘓𝘈 மற்றும் 4 முறை 𝘔𝘗) (1917-1993)
- மாணிக்கவேல் நாயகர் (1886-1996)
இன முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகள்
- ஆரம்ப கால வன்னியர் சங்கத்தில் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள் பொது செயலாளராக பதவி வகித்தார்.
- 2001-ம் ஆண்டு பல்வேறு வன்னிய சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னியர் கூட்டமைப்பாக உருவெடுத்தது.
- திரு. சி. என். என். இராமமூர்த்தி அவர்கள் வன்னியர் குரல் என்ற பத்திரிக்கையை துவக்கி ஆசிரியராக, பதிப்பாளராக செயல்படுகிறார்.
- 2013-ம் ஆண்டு தமிழ் சமூக பாதுகாப்புச் சங்கம் அமைத்து அதில் அந்தணர் முதல் ஆதி திராவிடர் வரை இருந்த வெறுப்புணர்வு மற்றும் சச்சரவுகளை கலைந்து ஒற்றுமையை ஏற்படுத்த துவங்கியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்.
இனத்திற்கான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள்
- 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் வன்னியர் சங்கத்தின் பொது செயலாளராக 20% இட ஒதுக்கீடு வன்னியர் குலத்திற்கு பெற்றுத்தர வேண்டும். என போராட்டம் கண்டோம். இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சேலம் மத்திய சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்தார் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள். இந்த போராட்டத்தின் போது 25 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 லட்சம் பேர்க்கு மேல் கைது செய்யப்பட்டனர்.
- இதைத் தொடர்ந்து திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள் கைது செய்யப்பட்ட 2 லட்சம் பேர் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்று அன்றைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் வேண்டுகோள் வைத்து வெற்றி கண்டவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்
- அரசாங்கத்தை அணுகி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கான நஷ்டஈடு ரூபாய் 3 லட்சத்தை 25 தியாகிகளுக்கு பெற்றதும், இன்றைய தினம் வரை மாதத்திற்கு ரூபாய் மூவாயிரம் என ஓய்வூதியம் பெற்று கொடுத்ததும் திரு. சி.என். இராமமூர்த்தி அவர்கள்.
- 8 ஆயிரம் மெகாவாட் கொண்ட ரூபாய் 40 ஆயிரம் கோடியிலான அனல்மின் நிலையத்தை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து செய்யூரில் கட்டி அதற்காக ஒரு துறைமுகத்தை ஆலம்பரக்கோட்டை என்ற ஊரில் ஏற்படுத்த காரணமானவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள். 2008-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியாகி இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
- இந்த அனல்மின் திட்டம் காலதாமதமானதால் மரக்காணத்திலிருந்து சென்னை வரை ஒரு போராட்ட பயணம் மேற்கொண்டு 10.12.2008 அன்று முழு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள். இந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர் மற்றும் 40 அரசியல் தலைவர்கள் வரவேற்று பேசினர்.
- 2008-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பு உரிமையை பெற்றுத்தர போராட்டத்தை நடத்தியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்.
- மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்..
- சென்னை கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைய போராட்டம் நடத்தியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்கலைக் கழகத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்.
- ஏறத்தாழ 40 ஆண்டுகள் போராடி வன்னியர் குல சத்திரியர் பொது சொத்து நல வாரியம் அமைத்தவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள். இந்த காரணத்திற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி கண்டு அந்த தீர்ப்பின்படி தமிழக சட்டமன்றத்தில் 05.07.2018 அன்று ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு பின்னர் இந்திய ஜனாதிபதியால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு இந்த நலவாரியம் துவங்கப்பட்டது.
முக்கிய சாதனைகள்
- திரு. சி. என். இராமமூர்த்தி அவர்களின் வாழ்நாள் சாதனை ‘‘வன்னியர் குல சத்திரியர் பொது சொத்து நலவாரியத்தை சட்டப்படி அமைத்தது”.
- இந்த வாரிய சொத்துகள் கடந்த 3 நூற்றாண்டுகளாக வன்னியர் குல சத்திரியர் பெரும் செல்வந்தர்களால் உருவாக்கப்பட்டது. இவர்களின் நோக்கம் தங்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்கள் சொத்துக்களை பயன்படுத்த வேண்டுமென்பது தான். ஆனால் காலப்போக்கில் இந்த அறக்கட்டளைகள் சுயநலம் மிகுந்த சிலரால் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த அறக்கட்டளைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன்மூலமாக இந்த சமூக முன்னேற்றத்திற்காக அதை பயன்படுத்துவது என்ற நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த நலவாரியம்.
- ஈழவர் நலவாரியம் மற்றும் வக்பு வாரியம் போன்று வன்னியர் குல பொதுச் சொத்து வாரியம் செயல்படுத்தப்பட வேண்டுமென்று முதன்முதலில் குரல் கொடுத்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் திரு. சி. என். இராமமூர்த்தி அவர்கள்.
போராட்ட வெற்றிகள்
- தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக 2001-ம் ஆண்டு பொது சொத்து வாரியம் துவக்கப்பட்டு அன்றைய திமுக அரசு திரு. சந்திரசேகர் IAS (முன்னாள் தேர்தல் ஆணையர்) இந்த நலவாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- 2001-2006 இடைப்பட்ட காலத்தில் மாண்புமிகு செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் அரசில் கூட்டணி கட்சியாக டாக்டர் திரு. ராமதாஸ் அவர்கள் பங்கெடுத்து 27 MLA-க்களை பெற்றார். இவர் இந்த நலவாரியம் அமைப்பதை தடுத்தார்.
- 2006-2011 காலகட்டத்தில் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்கள் 18 இடங்களை பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி சேர்த்து இந்த வாரிய முயற்சியை தடை செய்தார். இந்த காலகட்டத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தார். அவர் வழிகாட்டுதலின் பேரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதன் மூலமாக இந்த வாரியம் அமைக்கப்பட்டு, சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்கள்.
- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றி அதை இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் 05.02.2019 அன்று அனுமதி அளித்தபின் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. வன்னியர் குல சத்திரியர்கள் அறக்கட்டளைகள் அனைத்தும் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் அறக்கட்டளைகள் உட்பட அனைத்தும் தற்போது இந்த வாரியத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.