நாடும், அரசும்
- எங்கள் கட்சி ஒரு சிறந்த அரசாங்கமும், அரசு ஆளுமையும் அமைய உறுதி பூண்டுள்ளது. ஊழலற்ற மற்றும் திறந்த மனப்பான்மை கொண்ட அரசாக செயல்பட உறுதியளிக்கிறோம்.
- நாங்கள் அரசுக்கு தொடர்ச்சியான முறையில் மக்கள் மனதில் ஏற்படுகின்ற எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக செயல்படுவோம். மக்கள் மனதை அரசுக்கு கொண்டு செல்வோம்.
- இணையம் சார்ந்த அரசு சேவைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய செய்வோம்.
- ஆரம்ப நிலையில் இருந்து கிராம நிர்வாகம் தொடர்ந்து எங்களது கவனத்தை செலுத்தி ஊழலற்ற தன்மையை உறுதி செய்வோம்.
- எங்கள் கட்சி கிராம, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி, மாநகராட்சி சேவைகளை கவனித்து மக்கள் அனைவரும் பெறுவதற்கு உறுதியளிக்கிறோம்.
- ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை உறுதியளிக்கிறோம். காப்பதற்கு உறுதியளிக்கிறோம்.
- ஒவ்வொரு ஆறு மாதமும் அரசின் செயல்பாடுகள் குறித்து எங்களது மதிப்பீடுகளை அரசுக்கு தெரிவித்து வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்போம்.
ஜனநாயகத்தை காப்போம்
- எங்கள் கட்சி ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஜனநாயக உரிமைகளை காப்பதை கடமையாக கொண்டிருப்போம்.
- இந்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய அனைத்து தேவைகளையும் அரசிடமிருந்து பெற உறுதியளிப்போம்.
- சமூகத்தின் பல்வேறு நிலைகளில் எங்களுடைய உரையாடல் மூலமாக அவர்கள் தேவையை புரிந்து அவற்றை நிறைவேற்ற அரசிடம் முறையிடுவோம்.
- அமையவிருக்கும் அரசு ஒரு திறந்த புத்தகமாக திகழவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
- அனைத்து தேர்தல்களும் நேர்மையான முறையில் நடப்பதற்கு அரசினை வலியுறுத்துவோம்.
- சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் அடக்குமுறைக்கு உள்ளான குடிமகனுக்காக தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
பன்முகம் கொண்ட சமூக, இன, மொழி, அரசியல் பண்பை காத்திடுவோம்
- இந்த தாய்த் திருநாடு பன்முகம் கொண்ட கலாச்சாரம், இனம், மத மற்றும் தேசிய இனங்களை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது எங்கள் கட்சியின் தாரக மந்திரம். இவற்றை சார்ந்து கலாச்சாரம், ஜாதி, இனம், மத தேசிய இன ஒற்றுமைகளுக்காக பாடுபடுவோம்.
- நாட்டின் அனைத்து சிறுபான்மையினருக்கும், அரசியல் அமைப்பு கொடுத்திருக்கும் உரிமைகள் பெறுவதற்கும் உறுதி பூண்டுள்ளோம்.
ஒவ்வொரு குடிமகனின் உரிமையை பாதுகாப்போம்
- சமூகத்திலுள்ள விவசாயிகள், தொழிலாளர்களும், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களுக்கான உரிமையை பெற்றுத் தருவோம் என்று உறுதியளிக்கிறோம்.
- ஒவ்வொரு குடிமகனின் தனிமனித உரிமையை பாதுகாப்பதை முதற்கடமையாக கொண்டு ஜாதி, இனம், மத வேறுபாடுன்றி அனைவரையும் அரவணைப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
- ஒவ்வொரு தனிமனிதனும் உரிமையையும் குறிப்பாக பேச்சுரிமையையும் பாதுகாப்போம் என்று உறுதியளிக்கிறோம்.